விவசாய கறிக்கோழி வளர்ப்போர் பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து வருகிற 29-ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய கறிக்கோழி வளர்ப்போர் பணியாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்போர் பணியாளர்கள் சங்கத்தினர் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் நியாயமற்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறி அதனை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கடந்த இரு ஆண்டுகளாக தேங்காய் மஞ்சி, கறி முட்டை போன்ற இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் வேலையாட்களின் கூலி உயர்வாலும் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் முறைப்படுத்தப்படாத குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் அடுக்கு விகிதம், தரமற்ற தீவனம் போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.



மேலும், கோழி வளர்ப்பு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான BCC அமைப்பிற்குக் கடந்த ஆறு மாத காலங்களாகப் பதிவு கடிதம் மின்னஞ்சல் அனுப்பியும் நேரில் சென்று கோரிக்கை கடிதங்கள் வழங்கியும் தீர்வு கிட்டாத நிலையில் தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளைக் கண்டித்து வருகின்ற 29ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...