வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்புவாசிகள் மனு..!

இதுவரை மின் இணைப்பு வீட்டு வரி உள்ளிட்டவற்றை கட்டி வருவதாகவும், உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய வலியுறுத்தியதற்கும், மாற்று இடம் வழங்க கோரியும் பல்வேறு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய வலியுறுத்தி அந்தந்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் அணைப்புதூர் பகுதியில் 138 குடும்பங்கள் வசித்து வரக்கூடிய இடம் நீர்நிலை புறம்போக்கு என காலி செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



அவ்விடத்தில் குடியிருப்பவர்கள் இதுவரை மின் இணைப்பு வீட்டு வரி உள்ளிட்டவற்றைக் கட்டி வருவதாகவும், உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதேபோல திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதியில் 40-க்கும் மேற்பட்டவரை காலி செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாற்று இடம் வழங்க வேண்டியும் நகராட்சித் தலைவர் குமார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...