கோவை மாநகராட்சியில் பராமரிப்பின்றி போடப்பட்ட சமுதாய நலக்கூடம், பூங்காக்களில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி நேரில் ஆய்வு…!

மாநகராட்சி அதிகாரிகளிடம் சமுதாயக் கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி உள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் பூங்காவில் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி 78-வது வார்டுக்குட்பட்ட IDUP-காலனி சமத்துவக்கூடம் கடந்த6-வருடமாக பராமரிப்பின்றி சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் சிவசக்தியிடம் சமுதாயக்கூடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் இன்று அப்பகுதிக்குகோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் நேரில் சென்று ஆய்வு பணி மேற்கொண்டார். மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் சமுதாயக்கூடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.



மேலும் அப்பகுதியில் கடந்த ஆட்சியில்பராமரிப்பின்றி இருந்த சிறுவர் பூங்காக்களையும் தூய்மை பணி மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகளும் சென்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...