கோவையில் 108-ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்..!

அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

கோவைஅடுத்தகணபதி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரின் மனைவி மகேஷ்வரி (28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்றுவீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார்.

இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காந்திபுரம் பகுதியில் இருந்துவிரைந்து சென்ற ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது.

இதையடுத்து,ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன் அவருடைய வீட்டிலேயே பைலட் சுரேஷ் உதவியுடன் பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கணபதி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகத் தாய் சேய் இருவரையும் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்இருவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...