தொடரும் பிரதமர் படமும் பஞ்சாயத்து சண்டையும் ... கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..!

வெள்ளலூர் பேரூராட்சியில் பிரதமர் புகைப்படத்தை திமுக கவுன்சிலர் அகற்றிய விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினரால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: திமுக கவுன்சிலர் பிரதமர் புகைப்படத்தை அகற்றியதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புபாஜக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நேற்று முன்தினம் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் பிரதமர் புகைப்படத்தை மாட்டினர். இதனை அடுத்து திமுக கவுன்சிலர் கனகராஜ் அதனை அகற்றினார். இதனால் பாஜகவினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுக கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திரண்டதால் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலை அடைந்தனர். இதனால் பாஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இன்று வந்த பாஜகவினரில் ஒரு குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயும் மற்றொரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியும் காத்திருக்கின்றனர்.



இதனிடையே பாஜகவினர் கண்ட முழக்கங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஅமர்ந்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். சிலர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...