கோவையில் மாடு அறுவை மனைகளில் 'கட்டணக்கொள்ளை'.. இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை..!

மாடு அறுவை நிலையத்தில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிக்கும் ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் கோவை மாநகர் மாவட்ட மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் அதன் தலைவர் நிம்மதி இஸ்மாயில் தலைமையில், கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.



அதில், கோவை சத்தி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட மாடு அறுவை நிலையத்தில், மாடு அறுவை கட்டணமாக மாடு ஒன்றுக்கு ரூ.10 என மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது. கடந்த காலங்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள மாடு அறுவை கட்டணமாக ரூ.10-க்கு பதிலாக சிறிய காளை ஒன்றுக்கு ரூ.70-மற்றும் பெரிய காளை ஒன்றுக்கு ரூ.250/-வசூல் செய்து அரசாங்கத்திற்கும் எங்களுக்கும் பெரிய அளவு இழப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 24.03.2022 அன்று நடைபெற்ற ஏலத்தில் அரசு நிர்ணயம் செய்த தொகையான (17,50,000) பதினேழு லட்சத்திற்கு மேல் மிக அதிகமான தொகையான 1,01,00,000/-ஒரு கோடியே ஒரு லட்சத்திற்கு ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மேற்படி மாடு அறுவை நிலையத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அரசு நிர்ணயம் செய்த ஏல தொகையை விட 6-மடங்கு அதிகமான தொகைக்கு எடுத்து வெற்றி பெற்றுள்ளார். நான் மிக அதிக தொகைக்கு ஏலத்தை எடுத்துள்ளதால் அரசு நிர்ணயம் செய்துள்ள மாடு அறுவை கட்டணமான ரூ .10-க்கு பதிலாக சிறய காளைகளுக்கு 150/-பெரிய காளைகளுக்கு ரூ.500/-கட்டணமாக எங்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்து எங்களிடம் இருந்து கட்டணக்கொள்ளை அடித்து வருகிறார்.

மேற்படி அதிகமான கட்டணத் தொகையை நாங்கள் கட்ட மறுத்த போதுமாடு அறுவை நிலையத்தை எங்களது, மாடுகளை அறுக்க விடாமல்பூட்டி வைத்து விட்டு எங்களை மிரட்டி கட்டாய வசூல் செய்து வருகிறார். இது போக நாங்கள் மாடு அறுவை நிலையத்தில் கட்டணம் கட்டி மாடுகளை அறுத்து சிறிய வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்த பிறகு அந்த சிறிய வியாபாரிகளையும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்.

இதனால் நாங்கள் மிகுந்த பெருத்த நஷ்டத்துக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாகி மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். எனவே மாடு அறுவைக்காக அதிக கட்டணம் வசூல் செய்து வரும் ஒப்பந்ததாரர் அஸ்கர் அலிமீது சட்டப்படிநடவடிக்கை எடுத்து, அவரதுஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து மேற்படி மாடு அறுவை நிலையத்தினை அரசாங்கமே எடுத்து நடத்திநியாயமான அறுவை கட்டணம் வசூல் செய்து எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...