கோவை மாநகராட்சியில் 24-மணி நேர இணைய வழி குடிநீர் கண்காணிப்பு திட்டம்: மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்…!

இத்திட்டம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. செல்போன் மூலம் குடிநீரின் தரம், சீரான அளவில் அனைத்து வீடுகளுக்கு செல்கிறதா என்பதை கண்காணிக்கப்படுகிறது.



கோவை: கோவை மாநகராட்சியில் இணைய வழியில் முழு நேர குடிநீர் விநியோக கண்காணிப்பு திட்டத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஆண்டுதோறும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப திட்டங்களை ஊக்குவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ்(EEE) துறையால் உருவாக்கப்பட்ட இணையவழி குடிநீர் விநியோக தொழில்நுட்ப திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி பகுதியில் இதனை செயல்படுத்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவனத்துடன் இணைந்து கோவை மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் குழுவினர் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.



மாநகராட்சியின் 17-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர், அபிராமி நகர் பகுதிகளில் உள்ள 400 வீடுகளுக்கு முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 24 மணிநேர குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 400 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. செல்போன் மூலம் குடிநீரின் தரம், சீரான அளவில் அனைத்து வீடுகளுக்கு செல்கிறதா என்பதை கண்காணிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே பொது குடிநீர் விநியோக திட்டத்தில் சீரான, 24 மணி நேர குடிநீர் வழங்க செல்போன் மற்றும் இணைய தளம் மூலம் கண்காணிக்கும் திட்டம் கோவையில் சோதனை அடிப்படியில் அமலாகி உள்ளது. இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...