கோவை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 40-சதவீதமும், கார்கோ போக்குவரத்து 10-சதவீதமும் உயர்வு..!

கடந்த 2021-மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்து 40-சதவீதமும், கார்கோ போக்குவரத்து 10-சதவீதமும் அதிகரித்துள்ளது.


கோவை:கோவை சர்வதேச விமான நிலையத்தில் பல மாதங்களுக்கு பிறகு தினசரி இயக்கப்படும் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை மற்றும் மாதம்தோறும் கையாளப்படும் கார்கோ அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2022-மார்ச் மாதத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில், மொத்தம் 10,214-பயணிகளும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,70,436-பயணிகள் என மொத்தம் 1,80,650- பேர் பயன்படுத்தியுள்ளனர்.

கார்கோ போக்குவரத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில் 85-டன் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 743-டன் என மொத்தம் 828-டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.

கடந்த 2021-மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்து 40-சதவீதம், கார்கோ போக்குவரத்து 10-சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,23,664-பயணிகள் மற்றும் 749- டன் கார்கோ கையாளப்பட்டன.

இந்த தகவல் இந்திய விமான நிலைய ஆணையகம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கோயம்புத்தூர் ஏர்போர்ட் நியூஸ் என்ற ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக விமான போக்குவரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் சமீப காலமாக மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இன்றைய சூழலில் கோவை விமான நிலையத்தில் அதிகாலை முதல் இரவு வரை உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்து பிரிவுகளை சேர்த்து தினமும் 22-விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...