கோவையில் திமுக மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்!

திமுக மாணவர் அணி சார்பில் சென்னையில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற உள்ள நிலையில், கோவையில் இன்று திமுக மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ். மோகன் தலைமையில் நடந்தது.


கோவை: திமுக மாணவர் அணி சார்பில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னையில் நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில், திமுக மாணவர் அணியின் சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.



இந்த மாநாடு குறித்தான, மேற்கு மண்டல அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாவட்டம் சூலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ். மோகன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர், சேலம் ர.தமிழரசன், திமுக மேற்கு மண்டல மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மருத்துவர் V.G.கோகுல், SR பிரபு, பார்த்திபன் அந்தோனி ராஜ், தனம் தங்கதுரை மற்றும் மேற்கு மண்டல மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...