'கோவில்களை காப்போம்; கோவையை காப்போம்' என்று முழக்கமிட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை காந்திபுரம் பகுதியில் வி.கே.கே மேனன் சாலையில் "கோவில்களை காப்போம்; கோவையை காப்போம்" என்ற தலைப்பில் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் வி.கே.கே மேனன் சாலையில் "கோவில்களை காப்போம்; கோவையை காப்போம்" என்ற தலைப்பில் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இந்துக் கோவில்கள் அதிகளவு அகற்றப்பட்டு வருவதாகவும், மத கலவரங்களை தூண்டும் வகையில் பல்வேறு அமைப்புகள் செயல்படுவதாகவும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகவும், கோவையை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக இந்து முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், மாநில அமைப்பாளர் பக்தன் உட்பட கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவில்களை காப்போம் கோவையை காப்போம் என்ற முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், ஜாதி ரீதியாக இந்துக்களை பிளவுபடுத்தும் சக்திகளை வேர் எடுப்போம், பி.எஃப் மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளை தடை செய், ஆன்மீக கோவில்களுக்கு முன்பு நாத்திக தலைவர்கள் சிலைகள் எதற்கு?, என்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், கண்டன சிறப்புரையாற்றிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், "கோவை உக்கடம் போன்ற பகுதிகளில் உள்ள நகைக்கடை வியாபாரிகள் இஸ்லாமிய அமைப்புகளை கண்டு பயந்துள்ளனர். தற்போது, இஸ்லாமிய அமைப்புகள், குரானை, இந்துக்கள் மத்தியில் திணிப்பதாக", விமர்சித்தார்.



மேலும், தற்பொழுது இந்து கோவில்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாக கூறி அவற்றை இடித்து வருவதாக தெரிவித்த அவர், அதனை கண்டிக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் அனைத்து கல்லூரிகளுக்கு பின்புறம், போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதால், இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் குற்றம் சாட்டினார். எனவே, கோவை மாவட்டத்தில் சிறந்த காவலர்களை நியமித்து, கோவையையும், கோவில்களையும் காக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக வன்முறைக்கே பிறந்த கட்சி. தேச பக்தி உள்ளவர்களை இழிவுபடுத்துவது அவர்களுக்கு வாடிக்கையான விஷயம் என்று விமர்சித்தார். திமுக மற்றும் திராவிட கழகங்கள் இதே நிலைமையை தொடர்ந்தால், இந்து முன்னணி தொடர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.



இந்நிகழ்வில், இந்து கடவுள்கள் வேடமணிந்து சிறுவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...