இமயமலை தொடரில் வெற்றிக்கொடி நாட்டிய கோவை சிறுவன்! ஆட்டிசம் பாதித்த நிலையில் 14 ஆயிரம் அடி உயரம் ஏறி அசத்தல்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் 14,009 அடி ஏறி, கோவையை சேர்ந்த ஆட்டிசம் பாதித்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.


கோவை: கோவை, சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, வினய கஸ்தூரி தம்பதியினரின் மூத்த மகன் யதீந்திரா (12). இவர், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை அவரது இரண்டாவது வயதில் அறிந்த பெற்றோர், அவருக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வந்துள்ளனர்.

தொடர் பயிற்சிகளால் மகனிடம் முன்னேற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர், இமயமலை பகுதிகளில் வழக்கமாக டிரெக்கிங் செல்லும் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்றப் பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் இமய மலைத் தொடர்களில் ஒன்றான 28,000 அடி உயரம் கொண்ட பியாஸ் குண்ட் மலையில் ஆண்ட்ரூ ஜோன்ஸ் உடன் மலை ஏறத் தொடங்கிய சிறுவன் யதீந்திரா, 4 நாட்களில் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்தியுள்ளார்.

மேலும், அங்கு தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இமயமலை தொடர்களில் 14 அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் இவர் என கூறப்படுகிறது. சிறுவனின் முயற்சி ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...