இனி, கோவை மருதமலை முருகன் கோயில் தினமும் ஐந்து வகை பிரசாதம் வழங்கப்படும்..! பக்தர்கள் வரவேற்பு

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இனி நாள்தோறும் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம், கற்கண்டு சாதம், திணை மாவு உருண்டை, புளியோதரை, சம்பா சாதம் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி, சென்னை வடபழநி ஆண்டவர், பழநி தண்டாயுதபாணி சுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருத்தணி சுப்பிரமணியசுவாமி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, பண்ணாரி மாரியம்மன் ஆகிய 10 கோவில்களில், பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு காணொளி வாயிலாக பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 10 பிரசித்தி பெற்ற கோவில்களில், பக்தர்களுக்கு தினமும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம், சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் துவக்கி வைத்து பேசினார், அப்போது, "சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண்பொங்கல், முறுக்கு, சுண்டல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்படும். தினமும் 10 ஆயிரம் பேரும், திருவிழா காலங்களில் 25 ஆயிரம் பேர் வரையும் பயன் அடைவர்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பிரசாதம் தயாரிக்க போதிய அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அனைத்து பிரசாதங்களும் தரமாக தயார் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கோவை மருதமலை கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கோவை மாவட்ட இணை கமிஷனர் செந்தில் வேலவன், அறநிலையத்துறை துணை கமிஷனர் (பொ) விமலா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து, அறநிலையத்துறை துணை கமிஷனர் (பொ) விமலா கூறுகையில், "மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இனி நாள்தோறும் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம், கற்கண்டு சாதம், திணை மாவு உருண்டை, புளியோதரை, சம்பா சாதம் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் மற்ற நாட்களை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூடுதலாக பிரசாதம் வழங்கப்படும்," என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...