'நமது எம்.எல்.ஏ' வின் மக்கள் குறை தீர்ப்பு முகாம் - தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி 70வது வார்டில் நடைபெற்ற "நமது எம்.எல்.ஏ" வின் மக்களின் குறை தீர்க்கும் முகாமில் தெற்கு தொகுதி எம்.எல் ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.


கோவை: கோவை தெற்கு தொகுதி 70வது வார்டில் "நமது எம்.எல்.ஏ" வின் மக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கலந்துகொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பெரும்பாலும் சாலை வசதிகள் குறித்தான கோரிக்கை மனுக்களை அதிகப்படியான மக்கள் அளித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன், உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்வில், அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பிரகாஷ், சுரேஷ்பாபு, ஜனார்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...