கோவை கற்பகம் நிகர்நிலை  பல்கலையில் நடைபெற்ற மாநில அளவிளான கலை மற்றும் நடனப்போட்டி; 1250 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

'பிரணயா - 2022' ரூ. 2 லட்ச பரிசுத் தொகையுடன் நடைபெற்ற 'பிரணயா-2022' கலை மற்றும் நடனப் போட்டிகளில் திருச்சி, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சிறந்த பங்களிப்புக்கான சாதனையை நிகழ்த்திப் பாராட்டு பெற்றனர்.


கோவை:கோவை கற்பகம் நிகர்நிலைபல்கலையில் நடைபெற்ற மாநில அளவிளான கலை மற்றும் நடனப்போட்டியில் 1250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், 'பிரணயா - 2022' என்ற பெயரில், மாநில அளவிலான கலை மற்றும் நடனப்போட்டிகள் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்தும் சுமார் 1250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிநபர் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு, மருதாணிக்கலை மற்றும் முக ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.



தனிநபர் நடனப் போட்டியில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் ஆர்.ராபின்சன் முதல் பரிசாக ரூபாய் ரூ.7 ஆயரம் வென்றார். குழு நடனத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் யு. சுஷ்மிதா முதல் பரிசாக ரூ.20 ஆயிரம் வென்றார். 

குழு நடனத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. அடாப்ட்யூன் போட்டியில் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் கே. நித்தீஸ்வரன் முதல் பரிசாக ரூ.3 ஆயிரம் வென்றார். பாட்டுப் போட்டியில் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவர் முகமது அபித் முதல் பரிசாக ரூ.4 ஆயிரம் வென்றார். 

பல்சுவைப் பொழுதுபோக்குப் போட்டியில் திருச்சி, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் எஸ். நிதிஸ்குமார் முதல் பரிசாக ரூ.7 ஆயிரம் வென்றார். மருதாணிக் கலையில் கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் ரெஹானா இக்பால் முதல் பரிசாக ரூ.2 ஆயிரம் வென்றார். முக ஓவியப் போட்டியில் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக மாணவர் ஏ.பி.சீனிவாசன் முதல் பரிசாக ரூ.3 ஆயிரம் வென்றார்.



இரண்டு லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் நடைபெற்ற' 'பிரணயா-2022' கலை மற்றும் நடனப் போட்டிகளில் திருச்சி, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சிறந்த பங்களிப்புக்கான சாதனையை நிகழ்த்திப் பாராட்டு பெற்றனர். 

முன்னதாக, வியாழக்கிழமை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலை மற்றும் நடனப்போட்டிகளும், தொழில்நுட்பத் திறன்சார் போட்டிகளும், துறைவாரியாக நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பணப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இக்கலைநிகழ்வைக் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர் நலன் முதன்மையர், முனைவர் ப.தமிழரசி அவர்கள் ஒருங்கிணைத்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...