வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறைஅதன் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் மதியம் சுமார் 3 மணியிலிருந்து லேசான மழை பெய்ய துவங்கிபின்பு கனமழை பெய்து வருகிறது.
வால்பாறை ஸ்டான்மோர், பழைய வால்பாறை, ரொட்டிக் கடை, உருளிக்கள், கருமலை, வெள்ளைமலை, சின்னக்கல்லார், சிறுகுன்றா, போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட சிரமப்பட்டு வருகின்றனர். கனமழையால்சாலைகளிலும் வீதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

காற்றுடன் மழை பெய்ததால் இரு சக்கர வாகனங்கள் கீழே விழுந்து சேதம் அடைந்தது.இந்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் 5 மணி வரை பெய்த மழையின் அளவு 76 மில்லி மீட்டர் மழை பதிவானது.