“நான்‌ முதல்வன்‌”: கனவு மெய்ப்பட வேண்டும் திட்டத்தின்படி கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகள் மருத்துவர்களுடன் உரையாடல்..!

மாநகராட்சி பள்ளி மாணவியரில்‌ மருத்துவராக விரும்பிய 27-மாணவியர்‌ கோவை‌ ஜெம்‌ மருத்துவமனை மற்றும்‌ வி.ஜி.எம்‌. மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு சென்று நேரடியாக மருத்துவர்களுடன் உரையாடினர்‌.


கோவை‌: தமிழ்நாடு முதலமைச்சர்‌ தமிழக மாணவ, மாணவியர்களின்‌ நலன்‌ மற்றும்‌ மேம்பாட்டிற்காக “நான்‌ முதல்வன்‌” எனும்‌ சிறப்பு வாய்ந்த திட்டத்தினை கடந்த மாதம்‌ மார்ச்‌ 1-ம்‌ தேதியன்று தொடங்கி வைத்தார்‌.

இத்திட்டத்தின்‌ முக்கிய நோக்கம்‌ ஆண்டுக்கு 10 இலட்சம்‌ மாணவர்களின்‌ திறமைகளை மேம்படுத்துவதாகும்‌. மேலும்‌, மாணவர்களுக்கு அவர்களின்‌ திறன்களை மேம்படுத்துவதற்கும்‌, அவர்களின்‌ எதிர்காலத்தை உருவாக்குவதன்‌ மூலம்‌ சிறந்த திறமையை கண்டறிந்து மாணவர்களுக்கு கல்வி மற்றும்‌ தொழில்முறை ஆலோசனைகளை வழங்குவதாகும்‌.

"நான்‌ முதல்வன்‌" திட்டத்தின்‌ ஒருபகுதியாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ்‌ செயல்படும்‌ 5 பெண்கள்‌ மேல்நிலை மற்றும்‌ உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ 10, 11 மற்றும்‌ 12-ம்‌ வகுப்பு பயின்று வரும்‌ மாணவியரிடம்‌ சர்வதேச மகளிர்‌ தினத்தன்று, தமது வாழ்வில்‌ அடைய விரும்பும்‌ பணி சார்ந்த குறிக்கோள்‌ குறித்து கோரப்பட்டது. மாணவியர்‌ விரும்பும்‌ குறிக்கோளினை அடைய மாணவப்‌ பருவத்திலிருந்தே அவர்களைதயார்படுத்தவும்‌, உத்வேகப்படுத்தவும்‌ (Inspire) மாநகராட்சிப்‌ பள்ளி மாணவ, மாணவியருக்கென “கனவு மெய்ப்பட வேண்டும்‌ எனும்‌ திட்டம்‌” உருவாக்கப்பட்டது.

“கனவு மெய்ப்பட வேண்டும்‌'”' திட்டத்தின்படி மாணவியர்‌ அடைய விரும்பும்‌ இலக்காக, மருத்துவராக 27 மாணவியர்‌, பொறியாராக 12 மாணவியரும்‌, இந்திய ஆட்சிப்‌ பணிகளுக்கு 22 மாணவியரும்‌, இந்திய காவல்‌ பணிகளுக்கு 5 மாணவியரும்‌, நீதிபதியாக 1 மாணவியும்‌, லேப்‌ டெக்னீஷியனாக 1 மாணவியும்‌, கல்லூரி விரிவுரையாளராக 1 மாணவியும்‌, கல்வி அலுவலராக 1 மாணவியும்‌, வழக்கறிஞராக 1 மாணவியும்‌, விமானப்படையில்‌ பணிபுரிய 1 மாணவியும்‌, விண்வெளி வீரராக 1

மாணவியும்‌, வங்கி மேலாளராக 5 மாணவியரும்‌, பட்டயக்‌ கணக்காளராக 7 மாணவியரும்‌, அரசியல்வாதியாக 1 மாணவியும்‌, இராணுவ கர்னலாக 1 மாணவியும்‌,

சமூக ஆர்வலராக 5 மாணவியரும்‌, ஆசிரியராக 2 மாணவியரும்‌, எழுத்தாளராக 2 மாணவியரும்‌ விருப்பம்‌ தெரிவித்துள்ளனர்‌.

மாணவ, மாணவியா்கள்‌ விரும்பும்‌ உயர்ந்த பணி இலக்குகளை அடைய உத்வேகப்படுத்தும்‌ வகையில்‌ அப்பணிகள்‌ சார்ந்த அலுவலகங்கள்‌ மற்றும்‌ பணி இடங்களுக்கு மாணவ, மாணவியரை நேரடியாக அழைத்துச்‌ சென்று, ஏற்கனவே குறிப்பிட்ட இலக்கினை அடைந்து வெற்றிகரமாக பணிபரியும்‌ வல்லுநர்களைக்‌ கொண்டே பணி சார்ந்த விபரங்கள்‌, இலக்கினை அடையும்‌ வழிமுறைகள்‌ குறித்து நேரடியாக கலந்துரையாடல்‌ நடத்திட திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தின்‌ முதற்கட்டமாக, மாநகராட்சி பள்ளி மாணவியரில்‌ மருத்துவராக விரும்பிய 27 மாணவியர்‌ இன்று (23.04.2022) கோயம்புத்தூர்‌ ஜெம்‌ மருத்துவமனை

மற்றும்‌ வி.ஜி.எம்‌. மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு சென்று நேரடியாக மருத்துவர்களுடன்‌, அவர்தம்‌ பணியிடத்திலேயே உரையாடினர்‌. மருத்துவப்‌ பணி

சார்ந்து நேரடியாக தெரிந்து கொண்டனர்‌.

இத்திட்டத்தின்படி, தொடர்ந்து இதர பணி இலக்குகள்‌ சார்ந்த பணியிடங்களுக்கே மாணவ, மாணவியரை அழைத்துச்‌ சென்று துறை சார்ந்த வல்லுநா்களுடன்‌ நேரடியாக கலந்தாலோசனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...