கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் பிரதமர் மோடி படம் அகற்றம் - பாஜகவினர் ஆர்ப்பாட்டம் - 63 பேர் கைது…!

பிரதமர் மோடி படம் அகற்றப்பட்ட தகவலறிந்த பாஜகவினர் கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை கைது செய்தனர்.



கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட பிரதமர் மோடி படத்தை அகற்றியதை, கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.



தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், பிரதமர் மோடி புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி, பல்வேறு அரசு அலுவலகங்களில் பாஜக கட்சியினர் பிரதமர் மோடியின் படத்தை மாட்டி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள செயல் அலுவலர் அறையில் பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை இன்று காலை மாட்டிச் சென்றனர்.



இதையடுத்து, வெள்ளலூர்பேரூராட்சி வார்டு உறுப்பினர் கனகராஜ் என்பவர் செயல் அலுவலர் அறையில் மாட்டி இருந்த பிரதமர் மோடி படத்தை கழற்றிக் அப்புறப்படுத்தினார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டதகவலறிந்த பாஜகவினர் கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுக வார்டு உறுப்பினர் கனகராஜை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...