கோவைக்கு தமிழக ஆளுநர் வருகையையொட்டி விமான நிலையம் அருகே கருப்பு சட்டை அணிந்து வந்தவர்களிடம் விசாரணை.

இன்று ஆளுநர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே கருப்பு உடை அணிந்து வந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


கோவை: இன்று கோவை விமான நிலையம் வந்த தமிழக ஆளுநர் ரவி, அங்கிருந்து சாலை மார்கமாக நீலகிரி மாவட்டம், ஊட்டி செல்கிறார். இதனையொட்டி, கோவை விமான நிலையம் மற்றும் அவிநாசி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாக, பல்வேறு அமைப்புகள் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. பின்னர், அது ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

இதனையொட்டி, இன்று ஆளுநர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையம் அருகே கருப்பு உடை அணிந்து வந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.



அவர்களது, வாகனம் மற்றும் உடமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், கருப்பு கொடி யாரேனும் வைத்துள்ளார்களா.? அல்லது கருப்பு துணி ஏதேனும் வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...