கோவையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்தான கருத்துகேட்பு கூட்டம் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 15 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில், புதியதாக 8 சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்தான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், ஏப்ரல் 30ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 15 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில், புதியதாக 8 சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்தான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், ஏப்ரல் 30ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்: வணிகவரி மற்றும் பதிவு துறை 2021ன் படி அரசின் கொள்கை முடிவிற்கிணங்க பட்டாமாறுதலை எளிமையாக்க, பொதுமக்கள் ஆவண பதிவினை விரைந்து முடிக்க, கோவை மாவட்டத்தில் அடங்கிய 313 கிராமங்களில் ஆட்சி எல்லையை மறுவரையறை செய்தும் புதியதாக 8 -- காளப்பட்டி, துடியலூர், சர்க்கார்சாமக்குளம், வெள்ளலூர், கருமத்தம்பட்டி, காட்டம்பட்டி, காரமடை செலக்கரிச்சல், ஆகிய இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைப்பது குறித்து வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார், என்று அவ்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...