கோவையில் ஓய்வூதிய பணத்தை தராத தந்தையை வெட்டிக் கொலை - மகன் தலைமறைவு….!

கோவை புலியகுளம் பகுதியில் ஓய்வூதிய பணத்தை தராததால், தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை ராமநாதபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை புலியகுளம் பகுதியில் ஓய்வூதிய பணத்தை தராததால், தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (61). இவர், பி.ஆர்.எஸ் வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சுரேஷ், பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். மேலும், சுரேஷுக்குதிருமணமாகி சிங்காநல்லூர் பகுதியில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார்.



இந்நிலையில் கருப்பசாமி கடந்த சில மாதங்களாகவிமலா என்ற பெண்ணுடன்சேர்ந்து வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கருப்பசாமிக்கு அண்மையில் வந்த ஓய்வூதிய பணத்தை மொத்தமாக விமலாவிடம் கொடுத்துள்ளார். இதனால், கருப்பசாமி மற்றும் சுரேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு கருப்பசாமி டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, விமலா வீட்டு வாசலில் படுத்திருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு வந்த சுரேஷ் கருப்பசாமியை அருகே உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று ஓய்வூதிய பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், சுரேஷ், கருப்பசாமியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தலைமறைவானார்.



இதில், ரத்த வெள்ளத்தில் இருந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...