கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் ஐ.டி ஊழியர் வீட்டிலிருந்த 19 சவரன் நகை மாயம்…!

கோவை ஆர்.எஸ் புரம் சண்முகம் சாலையில் உள்ள வீட்டில், கதவு ஏதும் உடைக்கப்படாமல், நகை மாயமான சம்பவம் குறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ் புரம் சண்முகம் சாலையை சேர்ந்தவர் கமலாதேவி (62). இவர் ஐ.டி வேலை பார்த்து வரும் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு பொருட்கள் வாங்க அவர் வணிக வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 19 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

ஆனால், வீட்டின் கதவுகள் எதுவும் உடைக்காமல், நகைகள் எப்படி மாயமானது என்று புரியாத கமலா தேவி, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நகைகள் மாயமான வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

நகைகள் மாயமானது குறித்து வீட்டிலிருந்த நபர்களிடமும் விசாரித்த போலீசார், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...