கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட குப்பை அள்ளும் லாரிகள், ஆட்டோக்கள், எப்.சி செய்வதற்காக பல மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எப்.சி செய்ய மாநகராட்சி பணம் கொடுக்காததால், இன்னும் வாகனங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் குப்பைகளை எடுக்க போதுமான வாகனம் இல்லாதது குறித்து மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகோ, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிற்கு கடிதம் வழங்கி உள்ளார்.
அதில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வட்டங்களில் குப்பைகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த மாநகராட்சி லாரிகள், ஆட்டோக்கள், எப்.சி செய்வதற்காக பல மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எப்.சி செய்ய மாநகராட்சி பணம் கொடுக்காததால், இன்னும் வாகனங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை.
இதனால், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு, மத்திய மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்று மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கோரிக்கை வைத்துள்ளார்.