அறிவிக்கப்படாத மின்வெட்டை பார்க்கும் போது கடந்த திமுக ஆட்சியின் 'ட்ரெய்லர்' போல் உள்ளது - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டை பார்க்கும் போது, 2006 இல் இருந்து 2011 வரை இருண்ட கால ஆட்சியாக இருந்த திமுக ஆட்சியின் ட்ரெய்லர் போல் உள்ளது.

இதற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலக்கரியை தருவதில்லை என முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதனை தெளிவுபடுத்த வேண்டியது பாஜகவின் கடமை. இந்தியாவில் 2.22 கோடி டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாகவும், அப்படியிருக்கையில் தமிழகத்தில் மட்டும் வினோதமாக மின்வெட்டு எப்படி வருகிறது..?

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு இருந்தும், தமிழக அரசு ஏன் 4 பவர் ஸ்டேஷன்களில் உற்பத்தியை நிறுத்தி வைத்தது..? தமிழகத்தில் செயற்கை மின்வெட்டை உருவாக்கி தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவது திமுகவிற்கு கைவந்த கலை. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , தமிழகத்திற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்று கூறுகிறார் ஆனால், தமிழகத்திற்கு அது எப்போது தேவை என்றால், தமிழகத்தில் உள்ள 5 மின் உற்பத்தி நிலையங்களும் 85% இருக்கும் பொழுதுதான் 72,000 டன் நிலக்கரி தேவைப்படும்.



டேன்ஜெட்கோ (TANGENDCO) நஷ்டத்தில் இருப்பது குறித்து 2006ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை வெள்ளை அறிக்கை வேண்டும். 2006-ல் மின்சாரத்தின் நூதன திருட்டுக்கு சுழி போட்டது திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட மின்வெட்டு கிடையாது. ஆனால், தமிழகத்தில் மட்டும் 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது. தமிழகத்தில் 1 மெகாவாட் சோலார் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் அமைச்சருக்கு கமிஷன் தர வேண்டும்", என்று குற்றம் சாட்டினார்.

கோவை இடையர்பாளையத்தில், ஜனவரி 2020ல் டேன்ஜெட்கோ பி.ஜி.ஆர். எனர்ஜிக்கு சப் ஸ்டேசன் போட 224 கோடி பட்ஜெட் போடப்பட்ட நிலையில், தற்போது வரை கல்லும் மண்ணும் மட்டுமே போட்டு நிரவி உள்ளதாக தெரிவித்தார். மேலும், எதற்கெடுத்தாலும் மத்திய அரசு தர வேண்டுமென கூறினால், தமிழகத்திற்கு எதற்கு அரசு இருக்க வேண்டும், எனவும் கேள்வி எழுப்பினார்.

திமுக அரசு எந்த வேலையும் செய்யவில்லை என்று விமர்சித்த அவர், மக்கள் அடுத்த வருடத்திற்கு ஜெனரேட்டர் வாங்கி வைத்து கொள்ளுங்கள் 2023க்குள் சொந்தமாக அவரவர் பவர் பிளாண்ட் வைத்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் முக கவசம் அணிய வில்லை என்றால் 500 ரூபாய் அபராதம், ஆனால் கவர்னர் மீது கல்லை எடுத்து அடித்தால் மாலையில் பெயில் கிடைத்து விடுகிறது என விமர்சித்த அவர், இதுதான் தமிழகத்தின் சந்தி சிரிக்க கூடிய சட்ட நிலைமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.



தமிழகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது பி.சி.ஏ வழக்கு உள்ளதால், நாளையில் சென்னையில் நடைபெறவுள்ள நீதித்துறை விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராமனா அருகே அமைச்சர் ரகுபதி அமர்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் இது குறித்து நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

10 மாத காலங்களாக சிறந்த காவல்துறை என்ற பெயரை தமிழகம் இழந்து வருவதாகவும் தெரிவித்த அவர், ஆளுநருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றால் மக்களை பாதுகாக்க கூடிய காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என கேள்வி எழுப்பினார். சட்டத்தை பாதுகாக்க கூடிய டிஜிபி கூட வாயை மூடிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினின் கார் கமலாலயம் வர தகுதியில்லை என தெரிவித்த அவர், உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு மக்கள் பணி செய்தால் மட்டுமே கமலாலயம் வர அவர் தகுதி பெறுவார் என ரஜினி நடித்த படத்தை எடுத்துக்காட்டி (உதயநிதி ஸ்டாலினின் கார் கமலாலயம் வர ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகாது), என்று விமர்சித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...