தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நாளை முதல் கோடைக்‌கால நீச்சல்‌ பயிற்சி முகாம்‌ ஆரம்பம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இந்த ஆண்டு கோடைக்கால நீச்சல்‌ பயிற்சி நாளை ஏப்ரல் 23 ஆம்‌ தேதி முதல் தொடங்க உள்ளது. இப்பயிற்சியினை, நாளை காலை பல்கலைக்கழக துணைவேந்தர்‌, பேராசிரியர்‌ வெ. கீதாலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக, மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு, கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ மாணவிகள்‌ அனைவருக்கும்‌ நீச்சல்‌ பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடத்தபட உள்ளது.

அதன்படி, ஏப்ரல்‌ 23 முதல்‌ ஜூன்‌ 21 ஆம்‌ தேதி வரை தினமும்‌ காலை 7 மணி முதல்‌ பிற்பகல்‌ 12.30 மணி வரை மாணவர்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கும்‌, பிற்பகல்‌ 3 மணி முதல்‌ மாலை 5 மணி வரை மாணவியர்களுக்கும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட உள்ளது.

ரூபாய். 3,068 பயிற்சி தொகையாக செலுத்தி, ஐந்து வயதுக்கு மேல்‌ உள்ள அனைவரும்‌ பங்கேற்று பயிற்சி பெறலாம்‌ என்றும் எந்த பயிற்சியில்‌ பங்கு பெற விருப்பமுள்ளவர்கள்‌ பல்கலைக்கழக உடற்கல்வி துறையில்‌ தங்கள்‌ பெயர்களை பதிவு செய்து பயன்‌ பெறலாம்‌, என்று தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவர்‌ நல முதன்மையர்‌ முனைவர்‌. தி. ரகுசந்தர்‌, செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்‌.

மேலும்‌ , தகவல்‌ அறிய 9486775495/0422 6611279 என்ற எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...