உலக பூமி தினத்தை முன்னிட்டு நிர்மலா மகளிர் கல்லூரியில் பொதுமக்களுக்கு மூலிகை செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு மூலிகைச் செடிகளை கல்லூரி மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
உலக பூமி தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரியில் உலக வெப்ப மயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடுவோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கல்லூரி மாணவிகள் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மூலிகைச் செடி மற்றும் மரக்கன்றுகளைக் கொடுத்தனர்.

மேலும் பூமியை பாதுகாப்போம், இயற்கை வளங்களை பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.