கோவை ரயில் நிலையம் வந்த ரயிலில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை எடுத்து வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: 'ஆபரேஷன் 2.0' என்ற பெயரில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை வழியாக கேரளா செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் கோவை வந்த ரயில்களில், ரயில்வே போலிசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கோவை ரயில் நிலையம் வந்த தன்பாத் -ஆலப்புழா விரைவு ரயிலில், ரயில்வே போலீசார் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ரயிலில் உள்ள ஜெனரல் கோச்சில் சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த கழிவறை அருகே சில மூட்டைகள் கிடந்துள்ளது. அதை எடுத்து சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அங்கிருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை எடுத்து வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக ரயில்வே போலீசார் திடீரென சோதனை மேற்கொள்ளும்போது கஞ்சாவை எடுத்து வரும் நபர்கள் போலீசாரை பார்த்தவுடன் ரயில் நிலையத்திலோ, அல்லது வேறு பெட்டிகளுக்கு தப்பி சென்று வருகின்றனர்.
மேலும், ரயில் வழியாக அதிக அளவு தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் நடத்தி வருவதால் தமிழக இருப்புப்பாதை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.