அலட்சியம் வேண்டாம்.. அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மண்டல கூட்டத்தில் மண்டல தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல கூட்டம், சிங்காநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

இதில், 60 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிங்கை சிவா கூறியதாவது:-

கோவை வார்டுகளில் குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும், அதேசமயம், அதிமுக பிரமுகர்களின் வீடுகளுக்கு லாரியில் குடிநீர் தண்ணீர் மாநகராட்சி ஊழியர்கள் வழங்குகின்றார்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மாமன்ற உறுப்பினர் திராவிடன் பாபு கூறியதாவது:-

விளாங்குறிச்சி சாலை குண்டும், குழியுமாக உள்ளது, இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. உயிரிழப்பு ஏற்பட்டால் தான் இதை சரி செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து 8 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் கூறியதாவது:-

தனது வார்டில் குடிநீர் பிரச்சினை உள்ளது. தனது சொந்த செலவிலும் பல பணிகளை மேற்கொண்டுள்ளேன். 5 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற உறுப்பினராக வந்துள்ளதால், மாமன்ற உறுப்பினர்களிடம் அதிக பணிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு சேவையாற்ற நாங்கள் வந்துள்ளோம், அவர்களுக்கு சேவையாற்ற அதிகாரிகளான உங்களின் ஒத்துழைப்பு தேவை என கூறினார்.

மேலும், தூய்மை பணியாளர்களை வார்டுகளில் அதிகப்படுத்த வேண்டும், குப்பை எடுக்கும் லாரிகளுக்கு 35 லிட்டர் டீசல் மட்டுமே ஒரு நாளைக்கு வழங்குகின்றனர். டீசல் குறைந்தவுடன் சென்று விடுகின்றனர். எனவும், 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கூறியதாவது:-



கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. அதிமுக ஆதரவு அதிகாரிகளாகவே உள்ளனர்.



அவர்களின் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால், முதல்வரின் கவனத்திற்கு நேரிடையாக கொண்டு சென்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பொதுமக்களின் பல்வேறு விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது. அந்த விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தினார்.



இந்த கூட்டத்தில், உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியா தனபால், தீபா இளங்கோ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...