உலக பூமி தினம்: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!

உலக பூமி தினத்தை போற்றும் வகையில் மண்ணுக்கும் மனிதனுக்கும் தேவையான, ஆரோக்கியத்தை முதலீடு செய்ய வீட்டில் வளர்க்க கூடிய பழம் மற்றும் பூச்செடிகள் வழங்கப்பட்டது.



கோவை: உலக பூமி தினத்தை முன்னிட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு 2-ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உலக புவி தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், கோவை சுந்தராபுரம் செம்மொழிப் பூங்கா மற்றும் அன்னூர் பேருந்து நிலையங்களில் இன்று காலை முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



மேலும் உலக பூமி தினத்தை போற்றும் வகையில் மண்ணுக்கும் மனிதனுக்கும் தேவையானதை, ஆரோக்கியத்தை முதலீடு செய்ய வீட்டில் வளர்க்கக்கூடிய பழம் மற்றும் பூச்செடிகள் வழங்கப்பட்டது.



குறிப்பாகக் கொய்யா, மாதுளை, சீத்தா, சிறு நெல்லி, மர நெல்லி, எலுமிச்சை, மருதாணி, கறிவேப்பிலை, நாவல் மர கன்றுகள் என சுமார் 2000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 



காலை முதல் பொது மக்களும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை வாங்கி வருகின்றனர்.

இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறும் போது:-

ஐ.நா அமைப்பின் அறிக்கைப் படி அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பெரிய இழப்புகளை நாம் சந்திக்க உள்ளோம் என அறிவித்துள்ளது.

மேலும் பருவநிலை மாற்றம் காரணமாகப் பனிக்கட்டி உருகுதல் கடல்மட்டம் உயர்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

இவற்றைத் தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே நமது புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...