கோவை வரும் தமிழக ஆளுநருக்கு 'கருப்புக்கொடி' காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம் - தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன்

நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்ல கோவை வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனைத்து முற்போக்கு இயக்கம் சார்பில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தபெதிக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக ஆளுநருக்கு 'கருப்புக்கொடி' காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக, தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது:-



தமிழக மக்கள் நலனுக்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய19 மசோதாவிற்கு, தமிழக ஆளுநர் அனுமதி வழங்காமல், தமிழக மக்களை வஞ்சித்து வருகிறார். அதே போல், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவிற்கும் பதில் இல்லை.

தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுகிறார், தமிழக ஆளுநர். அதே போல், தமிழக ஆளுநர் மாளிகை சனாதான கூடமாக மாற்றியுள்ளனர். அண்மையில், மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், மாநிலங்கள் வலிமை பெறக் கூடாது என ஒடுக்கும் கருத்துகளை, ஆளுநர் கூறி வருகிறார்.

மேலும், பல்கலைக்கழகங்களை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தமிழக அரசு தலையிட முடியாத அளவிற்குநடத்தி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம், ஊட்டி செல்வதற்கு நாளை ஆளுநர் ஆர்.என். ரவி கோவை விமான நிலையம் வருகிறார். அப்போது,தமிழக மக்கள் உணர்வுகளை காட்டும் வகையில் விமான நிலையம் வரும் அவருக்கு அனைத்து முற்போக்கு இயக்கம் சார்பில் கருப்பு கொடி காட்ட உள்ளோம்.



தற்போது, ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய விவகாரத்தைச் சுட்டிக்காட்டி அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.சென்னாரெட்டி ஆளுநராக இருந்த போது அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்து முட்டை, தக்காளியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். ஆனால், தமிழக மக்களின்நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டினால் அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அப்படி என்றால் மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை, அதிமுகஒப்புக் கொள்கிறதா..? என்றுகேள்வி எழுப்பினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...