உஷார் மக்களே..! தமிழகத்தில் 'மாஸ்க்' அணியாவிட்டால் ரூ.500 அபராதம் - சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு…!

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மீண்டும் கொரோனா அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கணிசமாகப் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சென்னை ஐஐடி யில் 30 மாணவர்களுக்கு கொரோனாஉறுதியாகியுள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும் போது:-

தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஏற்கனவே கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம், அது இன்னும் தமிழக அரசால் திரும்பப் பெறவில்லை.

அதேவேளையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலேயே நேரடியாகச் சென்று பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது மெகா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் மைக்ரோ முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பதட்டமான சூழல் ஏதும் இல்லை, ஆனால் முதல் அலையின்போது குறைந்தபட்சம் பாதிப்பு 438, இரண்டாம் அலையில் 597, ஆனால் தற்போது மூன்றாம் அலையில் 18 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

அதன் காரணமாகத்தான் கவனமாக இருக்க அறிவுறுத்துகிறோம். மக்கள் முக கவசம் அணிந்து இடைவெளியை பின்பற்றினால் போதும் என தெரிவித்தார். அதேபோல் பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

பெரும்பாலும் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியாத காரணத்தினால் தான் தற்போது அபராதம் விதிக்க அறிவுறுத்தி உள்ளோம். கடந்த இரண்டு வாரங்களாக மட்டுமே வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களை பிரித்து பார்க்காமல் கண்காணிப்பு பணியை மட்டும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...