திருப்பூரில் அங்கன்வாடி மையத்தில் பொருள்கள் திருட்டு..!

சாமிநாதபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கேஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், மளிகை பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் அங்கன்வாடி மையத்தில் நடந்த திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் உள்ள சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு அங்கன்வாடி மையத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த கேஸ் அடுப்பு, சிலிண்டர், முட்டை, அரிசி உள்ளிட்ட மளிகை சாமான்கள் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடிய பாத்திரங்கள் அனைத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.



இன்று காலை அங்கன்வாடி ஊழியர்கள் மையத்தைத் திறந்து பார்த்தபோது பொருட்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் திருடிச் சென்றதன் காரணமாக இன்று மாணவ-மாணவிகளுக்கு உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அருகிலுள்ள மற்றொரு அங்கன்வாடியில் உணவு சமைத்து மாணவ-மாணவிகளுக்காகக் கொண்டுவரும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...