கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 87-வது வார்டில் கூடுதலாக 24-மணி நேர சிறுவாணி குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளதற்கு துணைமேயருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பொது குடிநீர் குழாய்கள் மூலம்24-மணி நேர சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி 87-வது வார்டு காந்திநகர் பகுதியிலும் பொது குழாய் மூலம் 24-மணி நேர சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் அங்கு அதிகளவு பொதுமக்கள் வசிப்பதால் ஒரு குடிநீர் குழாய் போதுமானதாக இருப்பதில்லை எனவும், கூடுதல் குடிநீர் குழாய் வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் 87-வது வார்டு கவுன்சிலர் பாபுகூடுதல் குடிநீர் குழாய் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது ஒரு கூடுதல் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

இன்று இந்த குடிநீர் குழாயைக் கோவை துணை மேயர் வெற்றி செல்வன் திறந்து வைத்தார். அவருக்கும் மற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் 88-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.