அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கோவையில் 4 ஊராட்சிகள் தேர்வு; ரூ.1.20 கோடி ஒதுக்கீடு!

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கோவையில் 4 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், அன்னுார் ஒன்றியத்தில் பொகலுார், ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி, வடவள்ளி, அ.மேட்டுப்பாளையம் என ஐந்து ஊராட்சிகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில், அல்லப்பாளையம், ஒட்டர்பாளையம், பச்சாபாளையம், பிள்ளையப்பம்பாளையம் என நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா 30 லட்சம் வீதம், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "ஒதுக்கப்படும் நிதியில் குடிநீர் பணிக்கு 30 சதவீதம், தெருவிளக்கு, சாலைக்கு 20 சதவீதம், மயானம், கிராம மேம்பாடு, சுய உதவி குழு திறன் மேம்பாட்டுக்கு தலா 10 சதவீதம், பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்புக்கு 15 சதவீதம் என பிரித்து பணிகள் செய்ய வேண்டும். இதற்காக, விரைவில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படும்", என்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...