கோவை மாநகராட்சி சார்பில், டெங்கு பரவலை தடுக்கும் அபேட் மருந்து தெளிப்பு, காய்ந்த மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற தூய்மைப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.32 காமாட்சி நகர் பகுதியில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, நீர் தேக்கம் உள்ள இடங்களில் கொசுப் புழுக்கள் உள்ளனவா..? என்பதை கண்டறியும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.73-க்கு உட்பட்ட ஏ.கே.எஸ். நகர் மாநகராட்சி பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.98-க்கு உட்பட்ட சாரதா மில் சாலை பகுதியில் நடைபெற்ற "மக்களைத் தேடி" மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

அதேபோல், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.18-க்கு உட்பட்ட பாங்கோ வீதி பகுதியில், மர அறுவை இயந்திரம் மூலம் காய்ந்த மரம், செடிகளை அரைக்கும் சிறப்பு தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது.