கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலசுந்தரம் சாலையில் கழவுநீர் கசிவால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
கோவை: கோவையின் முக்கிய சாலையான பாலசுந்தரம் சாலை. இச்சாலை, ஆவாரம்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைப்பதுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகம், அரசு மருத்துவமனை என ஏராளமான அரசு அலுவலகங்களுக்கும் செல்ல பயன்படுத்தும் பிரதான சாலை ஆகும்.

இந்த சாலையில், சாக்கடை அடைப்பால் கசியும் கழிவு நீரால், சாலை முழுவதும் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சாலை முழுவதும் கழிவுநீர் ஆற்று வெள்ளம் போல் ஓடுவதால், பாதசாரிகள் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் தேக்கத்தால் எழும் துர்நாற்றம் காரணமாக, மக்கள் மூக்கை மூடியபடி செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், இது கடும் சுகாதார சீர்கெட்டுக்கு வழிவகுக்கும் என்பதால், உடனடியாக இப்பிரச்சினையை மாநகராட்சி சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.