கோவையில் வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி - இடைத்தரகர் கைது!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வாரிய தலைவர் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த இடைத்தரகரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை காமராஜ் ரோட்டை சேர்ந்தவர் மதிவாணன் (60). இவர் கோட்சிங் சென்டர் நடத்தி வருகிறார். மேலும், லோக் ஜனசக்தி கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே கட்சியில் உறுப்பினராக இருந்த கோவைப்புதூர் அறிவொளி நகரைச் சேர்ந்த ரங்கன் (49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ரங்கன், வீட்டு பத்திரம் போன்றவற்றை பெற்று பணம் வாங்கி கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில், ரங்கன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வாரிய தலைவர் பதவி வாங்கித் தருவதாக, மதிவாணனிடம் ஆசை வார்த்தை கூறினார். அதற்கு, ரூ.12 லட்சம் வரை செலவாகும், எனவும் கூறியுள்ளார்.

அவர் கூறியதை நம்பிய மதிவாணன், பதவிக்கு ஆசைப்பட்டு 4 கட்டங்களாக ரூ.12 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைக் கொடுத்து நீண்ட நாட்களாகியும், ரங்கன் வாரிய தலைவர் பதவி வாங்கி கொடுக்கவில்லை என்பதால், பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால் ரங்கன், பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இது குறித்து மதிவாணன், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வாரியத் தலைவர் பதவி வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.12 லட்சம் பெற்ற மோசடி ரங்கனிடம் விசாரணை செய்து அவரை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...