சுட்டெரிக்கும் வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை.. கோவை வனப்பகுதிகளில் காட்டு யானைகளுக்கு 'உப்புக்கட்டிகள்' வைப்பு..!

ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மூலம் 92-உப்புக்கட்டிகள் பெறப்பட்டு வனப்பகுதியில் வைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோடைக்காலம் துவங்கியுள்ளதால் காட்டுயானைகள் வனப்பகுதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு நீர் தேடி வருகிறது.

குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் இருப்பதால், அவை தண்ணீர் தேடி ஊருக்குள் வராமல் இருக்க ஆங்காங்கே வனத்துறையினர் வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகளைக் கட்டி தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஓசை தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியால், ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மூலம் 92-உப்புக் கட்டிகள் பெறப்பட்டு, சிறுமுகை வனச்சரகத்தில் ஓடந்துறை பகுதியில் உள்ள குட்டை அருகே 7-கட்டிகளும், காட்டு யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பெத்திக்குட்டை சுற்று, பவானி சாகர் அணை நீர் தேக்க பகுதியில் 85-உப்புகளும் வைக்கப்பட்டதுள்ளது.



நீர் தேடி வரும் காட்டு யானைகள் உப்புக்களையும் உண்டு செல்கின்றது. இதே போல் வன எல்லைகளில் உள்ள நீர் தேக்கப் பகுதியில் உப்புக்கட்டிகளை வைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...