கோவையில் பயிர் காப்பீடு மற்றும் கிசான் கடன் அட்டை முகாம் 24-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை: பயிர் காப்பீடு மற்றும் கிசான் கடன் அட்டைக்கான சிறப்பு முகாம்கள் ஒரு வாரகாலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வேளாண்மை மற்றும் சகோதரர் துறைகளின் மூலம் வருகின்ற 24-ம்தேதி முதல் 1-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் "சிறப்பு விவசாயிகளின் பங்களிப்பே எமது முன்னுரிமை" என்கிற முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் பயிர் காப்பீடு, உழவர் கடன் அட்டை, மண் மாதிரிகள் சேகரித்தல் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்தான விரிவான விளக்க காட்சிகள் கருத்தரங்குகள் செயல் விளக்கங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிர் காப்பீடு திட்டத்தின் முக்கிய அம்சங்களான விவசாயிகள் காப்பீடு செய்திடும் வழிமுறைகள், காப்பீடு பெற தகுதிகள், இலக்கியத்திற்கான காரணிகள், இழப்பீடு கணக்கிடும் முறை, காப்பீடு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிய கூடிய வழி வகைகள், புகார்கள், சந்தேகங்கள் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கங்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கிராம பஞ்சாயத்து அளவில் நடைபெறக்கூடிய இம்முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.