'சிறு-குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும்'-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை - திருச்சி வரை சைக்கிள் பேரணி..!

சிறு-குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், அரசு காலிப் பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் DYFI சார்பில் மாநிலம் தழுவிய சைக்கிள் பயணம் நடைபெற்றது.



கோவை: "அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தர பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு-குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது" என்கின்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் மே 1-ம் தேதி மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது.



இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்தில் நான்கு மூலைகளில் இருந்து (சென்னை, கன்னியாகுமரி, கோவை, பாண்டிச்சேரி) இருந்து சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பயணக்குழுவில் DYFI இன் மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலசுந்திரபோஸ் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு தொடங்கப்பட்ட இந்த பயண குழுவானது துடியலூர் ஆவாரம்பாளையம் சிங்காநல்லூர் வழியாக திருச்சி செல்கிறது.

இந்த சைக்கிள் பயணத்தை DYFI இன் கேரள மாநில செயலாளர் தாமஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட DYFI அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்,CITU-கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், SFI கோவை மாவட்ட செயலாளர் தினேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயண குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த பாலசுந்திரபோஸ், ஒன்றிய அரசு 9 லட்சத்தும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், திமுகஅரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறிவிட்டு கடந்த 1 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது.

எனவே,மத்திய மற்றும் மாநில அரசு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய அரசு மத வெறியை தூண்டி விடுதாகவும் அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...