இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைப்பட்டதால், பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் சரியாகி விடும், என்று அமைச்சர் டுவீட் செய்துள்ளார்.
கோவை:
கோவையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதே போல, இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், மீண்டும் தொடர் மின்வெட்டு வந்துவிடுமோ..? என்ற அச்சத்தில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில், மக்கள் யாரும் கவலை பட வேண்டாம், இன்னும் சற்று நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைப்பட்டது.
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க, மின் வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால், நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி
செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடையநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது", என்று விளக்கமளித்துள்ளார்.