கோவையில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு: மக்கள், தொழில் துறையினர் அவதி!

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், கோவையில் சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 2010ல் தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறை பிரச்சினை அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்தது. தற்பொழுது மீண்டும் கோவையில் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்வது மக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று கோவை மதுக்கரை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல், காளப்பட்டி, குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மேலும் கணுவாய், தடாகம் பகுதிகளில் இரண்டு மணி நேரமும், சூலூர் சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல், கோவில்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், கள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டில் ஏற்பட்டது.

மேலும், இரவு நேரத்தில் கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளிலும், சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மின்வெட்டால், மின்விசிறிகள் இயங்காததால், விட்டு வாசலில் மக்கள் அமர்ந்து இருந்ததை காணமுடிந்தது. மேலும், ஒரு சில இடங்களில், மின்வெட்டால் சிறு குறு தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதே நிலை, தொடர்ந்தால் தொழில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, என்கின்றனர் தொழில்துறையினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மின்சாரம் இல்லாமல் மக்கள் வாழ்வது மிகவும் சிரமமான காரியமாகும். கோவையில் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட துவங்கியுள்ளது. கடந்த காலங்களைப் போல மீண்டும் மின் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக அதிக நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளில் இறுதி தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வு நெருங்கி வரும் சூழலில் மின்தடை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேல் கோடை காலத்தில் மின்தடை அமல்படுத்தினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது: கடந்த 2010 ல் துவங்கி மூன்றாண்டுகள் தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறை பிரச்சினை ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை மிகக் கடுமையாக பாதித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று பரவல் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வு என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தொழில் துறையினர் மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு அமல்படுத்த துவங்கினால், தொழில் வளர்ச்சி மிகக் கடுமையாக பாதிக்கப்படும். குறு மற்றும் சிறு பிரிவுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். தமிழக அரசு தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தொழில் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்சாரத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்க எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. அதன் பேரிலேயே, நாங்கள் மின்தடை செய்கிறோம். நள்ளிரவு 11 மணிக்கு மேல் மின்சார பயன்பாடு பரவலாக குறையத் துவங்கும். எனவே, அதற்குப் பின் இரவு தடையில்லாத மின்சாரம் வழங்க முடியும்.

இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...