4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இச்சங்கத்தின், தெற்கு வட்ட தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள் MRB செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், WIPRO வசம் IFHRMS உள்ளிட்ட திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாத கொரோனா சிகிச்சை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்திட வேண்டும், வரலாற்றுக் காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்", ஆகிய கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...