கோவை சின்னவேடம்‌பட்டியில்‌ அலுமினியம்‌ அச்சு வார்ப்பு வசதி மையம்‌ - தமிழக அரசின் தொழில் துறை கொள்கைக்கு டான்ஸ்டியா வரவேற்பு!

தமிழக அரசின்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில் துறை கொள்கைகளை டான்ஸ்டியா (TN Small and Tiny industries association) வரவேற்கிறது என்று அந்த அமைப்பின் தலைவர் கே மாரியப்பன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம்‌ சின்னவேடம்‌பட்டியில்‌ அலுமினியம்‌ அச்சு வார்ப்பு செய்யும்‌ குறுங்குழுமத்திற்கான ஒரு பொது வசதி மையம்‌ என்று 27 புதிய குறு சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்துறை கொள்கைகளை தமிழக ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ தா.மோ.

அன்பரசன்‌ அறிவித்திருப்பது, பாராட்டுக்குரியது என்று டான்ஸ்டியா (Tamil Nadu Small and Tiny industries association) அமைப்பின் தலைவர் கே. மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ தா.மோ. அன்பரசன்‌ அறிவிப்பின்படி,

- கோவை மாவட்டம்‌ சின்னவேடம்‌பட்டியில்‌ அலுமினியம்‌ அச்சு வார்ப்பு செய்யும்‌ குறுங்குழுமத்திற்கான ஒரு பொது வசதி மையம்‌.

- ஈரோட்டில்‌ மஞ்சள்‌ தூள்‌ உற்பத்தி செய்யும்‌ குறுங்குழுமத்திற்கான ஒரு பொது வசதி மையம்‌.

- ஈரோடு மாவட்டம்‌ பவானியில்‌ ஜமுக்காளம்‌ உற்பத்தியாளர்களுக்கான ஒரு பொது வசதி மையம்‌.

- திருப்பூர்‌ மாவட்டம்‌ குண்டடம்‌ வட்டாரத்தில்‌ கயிறு குபம பொது வசதி மையம்‌.

- கரூர்‌ மாவட்டம்‌ கபரமத்தி வட்டாரத்தில்‌ ஒரு கயிறு குபம பொது வசதி மையம்‌.

- திருப்பத்தூர்‌ மாவட்டம்‌ திருப்பத்தூர்‌ நகரத்தில்‌ ஊதுபத்தி குறுந்தொழில்‌ குபமம்‌.

- கடலூர்‌ மாவட்டம்‌ காடாம்புலியூரில்‌ 29 ஏக்கரில்‌ புதிய தொழிற்பேட்டை.

- தூத்துக்குடி மாவட்டம்‌, லிங்கம்பட்டியில்‌ 54 ஏக்கரில்‌ புதிய தொழிற்பேட்டை.

- கடலூர் மாவட்டம்‌ மதவேடு கிராமத்தில்‌ 11.41 ஏக்கரில்‌ தமிழ்நாடு அரசு மானியத்துடன்‌ புதிய தனியார்‌ தொழிற்பேட்டை.

- விருதுநகர்‌ மாவட்டம்‌ ராஜபாளையத்தில்‌ ஆயத்த ஆடை செய்யும்‌ மகளிர்‌ நெசவு குறுங்குழுமத்திற்கு ஒரு பொது வசதி மையம்‌.

- கடலூர்‌ மாவட்டம்‌ விருத்தாசலத்தில்‌ பீங்கான் மின்காப்பு உபகரணங்கள்‌ செய்யும்‌ குறுங்குழுமத்திற்கான ஒரு பொது வசதி மையம்‌.

கோவிட்‌ 19 பெருந்தொற்று காலத்தில்‌ பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர்‌ பயனடையும்‌ வகையில்‌ கோவிட்‌ உதவி மற்றும்‌ நிவாரணத் திட்டம்‌ என்ற அறிவிப்பு என மொத்தத்தில்‌ இந்த புதிய கொள்கை, அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு தமிழ்நாட்டில்‌ உள்ள சிறு மற்றும்‌ குறுந்தொழில்கள்‌ வளர்ச்சி அடையும்‌ நோக்கத்தில்‌ வந்துள்ளது, என டான்ஸ்டியா தலைவர்‌ கே மாரியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...