கோவையில் குளத்தேரி நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்

கோவை திருச்சி சாலையில் குளத்தேரி நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 55 வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அப்பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகளை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக கூறும் நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.



அதனை தொடர்ந்து, மாநகராட்சியின் 61 வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி சாலை குளத்தேரி நீர் மாசுபடுவதை தடுக்க அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.



தொடர்ந்து, அப்பகுதியில் தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக குப்பைகள் அகற்றப்பட்டது. குளத்திற்கு செல்லும் கால்வாயில் குப்பைகள் நிரம்யுள்ளதை தொடர்ந்து அந்த குப்பைகள் ஜேசிபி எந்திரம் கொண்டு உடனடியாக அகற்றப்பட்டதுடன், குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.



மேலும், குளத்தின் நீர் மாசுபடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாநகராட்சியின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மீட்கப்படும் என்றும் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் உறுதிபட தெரிவித்தார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...