கோவை காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி - உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் 184 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10,484 இரண்டாம் நிலை ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி தமிழ்நாடு முழுவதும் 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளி மற்றும் 35 தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் கடந்த மார்ச் 16 தேதி முதல் துவங்கப்பட்டு 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் 184 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதனை, காவல்துறை கூடுதல் இயக்குநர் (காவல் உயர் பயிற்சியகம்) மற்றும் (பொறுப்பு) காவல் துறை இயக்குனர் (பயிற்சி) அமல்ராஜ் ஐ.பி.எஸ் மற்றும் காவல்துறை தலைவர் (பயிற்சி) அருண் ஐ.பி.எஸ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பெண் காவலர்களுக்கு சட்ட வகுப்பு நடப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு அறிவுரையும் வழங்கினர்.

அவர்களுடன், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...