கோவையில் கோலாகலமாக நடந்த சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா!

கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 150, 200 அடி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.



கோவை: கோவை சவுரிபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா களைகட்டியது.



ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற விழாவில், பல்வேறு விதமான நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

இவ்விரு கோவில்களிலும், ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 21 நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சித்திரை விழா கொண்டாடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, சித்திரை திருவிழா உற்சாகத்துடன் கொண்டாபட்டு வருகிறது.

ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பூச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.



பக்தர்கள் சிலர் பெரிய கிரேன் மற்றும் வேன்களில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து வந்தனர்.



குறிப்பாக, பக்தர்களில் ஒருவர் 150 அடி அலகும், மற்றொருவர் 200 அடி அலகும் குத்தி ஊர்வலமாக வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.



பின்னர், ஆற்றில் இருந்து கிளம்பிய சக்தி கரகம் உள்ளிட்ட 6 கிரகங்களும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தன. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...