உலக பூமி தினம்: 'மண்ணோடு தொடர்பில்‌ இருங்கள்‌' - சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு..!

உலக பூமி தினத்தை முன்னிட்டு "மண் காப்போம்" இயக்கம் சார்பில் "மண்ணோடு தொடர்பில் இருங்கள்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.


கோவை: சத்குரு தொடங்கியுள்ள 'மண்‌ காப்போம்‌' இயக்கம்‌ குறித்து பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக உலக பூமி தினமான ஏப்ரல்‌ 22-ம்‌ தேதி, தமிழ்நாடு முழுவதும்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட உள்ளன.

"மண்ணோடு கொடர்பில்‌ இருங்கள்‌ (Connect With Soil) என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிகள்‌ சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம்‌, நாகர்கோவில்‌, திருநெல்வேலி, வேலார்‌, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர்‌ உட்பட தமிழகத்தின்‌ பல மாவட்டங்களிலும்‌, புதுச்சேரியிலும்‌ ஏப்ரல்‌ 22-ம்‌ தேதி நடைபெற உள்ளது. இதில்‌ பொதுமக்கள்‌, மாணவர்கள்‌, குழந்தைகள்‌ உட்பட ஆயிரக்கணக்கானோர்‌ பங்கேற்க உள்ளனர்‌.



அந்தந்த மாவட்டங்களில்‌, பேருந்து நிலையம்‌, ரயில்‌ நிலையம்‌ போன்ற மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ மண்‌ வளப்‌ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மண்‌ வளத்தை பாதுகாக்க அரசாங்கம் தேவையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி, ஈஷா நிறுவனர்‌ சத்குரு மண்‌ காப்போம்‌ என்ற சர்வதேச சுற்றுச்சூழல்‌ இயக்கத்தை தொடங்கியுள்ளார்‌.

இது குறித்து, பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த தனது 67வது வயதில்‌ 100 நாட்களில்‌ 3 கண்டங்கள்‌, 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ மோட்டார்‌ சைக்கிளில்‌ பயணிக்கும்‌ சவாலான பணியை மேற்கொண்டுள்ளார்‌.

மார்ச்‌ 21-ம்‌ தேதி லண்டனில்‌ இருந்து புறப்பட்ட அவர்‌ நெதர்லாந்து, ஜெர்மனி, செக்‌ குடியரசு ஆஸ்திரியா, ஸ்லோவினியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ்‌, பெல்ஜியம்‌ உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து அந்நாட்டு தலைவர்களுடன்‌ மண்‌ வளப்‌ பாதுகாப்பின்‌ அவசியத்தை வலியுறுத்து பேசியுள்ளார்‌.

இதை தொடர்ந்து, அவர்‌ மத்திய கிழக்கு நாடுகள்‌ சென்றுவிட்டு நிறைவாக இந்தியாவிற்கு பயணிக்க திட்டமிட்டுள்ளார்‌. முன்னதாக, ஆன்டிகுவா & பார்படா, செயின்ட்‌ லூசியா, டொமினிகா, செயின்ட்‌ கிட்ஸ்‌ & நெவிஸ்‌, கயானா, பார்படாஸ்‌ ஆகிய 6 கரீபியன்‌ நாடுகள்‌ தங்கள்‌ நாடுகளில்‌ மண்‌ வளத்தை பாதுகாக்க மண்‌ காப்போம்‌ இயக்கத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொண்டுள்ளன.

மேலும்‌, ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பு (UNCCD), ஐ.நா சுற்றுச்சூழல்‌ அமைப்பு (UNEP), உலக உணவு அமைப்பு (WFP) மற்றும்‌ CARICOM எனப்படும்‌ கரீபியன்‌ நாடுகளின்‌ கூட்டமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புகள்‌ மண்‌ காப்போம்‌ இயக்கத்திற்கு ஆதரவு அளித்து இணைந்து செயலாற்ற உள்ளன.

மேலும்‌, 54 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள காமன்வெல்த்‌ அமைப்பும்‌ இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...