கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிட மக்கள் இயக்கம், தமிழ் புலிகள் ஆகிய கட்சியினர் பங்கேற்றனர்.
கோவை: "மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு நடத்தக் கூடாது, நாட்டில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை கட்டாயப்படுத்தக் கூடாது, தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்", ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிட மக்கள் இயக்கம், தமிழ் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், வழக்கறிஞர் வெண்மணி உட்பட பல அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொது செயலாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.

இதில், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக தமிழக ஆளுநர் ரவி மாற்றி வருவதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், எனவும் வலியுறுத்தப்பட்டது.