கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு அரசு சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 40க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது:-

- சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

- அங்கன்வாடி பணியாளர்களின் கூடுதல் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.

- சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அலுவலக உதவியாளர்களுக்கு இணையான குடும்ப ஓய்வூதியத்தை சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

- அங்கன்வாடி திட்டத்தில் குறு மையங்களை ரத்து செய்து முதன்மை மையமாக தரம் உயர்த்த வேண்டும்.

- விலைவாசி உயர்வுகளுக்கு ஏற்ப உணவீட்டு செலவீனத்தை 5 ரூபாயாகவும் சில்லரை செலவீனத்தை 100 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.

- சத்துணவு அங்கன்வாடி அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக 5 லட்சம் ரூபாயும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும்.

- அங்கன்வாடி சத்துணவு திட்டத்திற்கான தனித் துறையை ஏற்படுத்த வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும்.

- ஓய்வு பெற்ற பணியாளர்கள் இறந்தால் இறுதி சடங்கிற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...