மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு 10-புதிய திட்டங்களுக்காக 16.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய 10-திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதற்கான பணிகள் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவை மாநகராட்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது 10 புதிய திட்டங்களுக்காக 16.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ள புதிய திட்டங்கள்:-
* கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆடிஸ் வீதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் 2.50 கோடி ரூபாய்க்கு அமைக்கப்பட்டுள்ளது.
* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பறை கட்டுவதற்கு ரூபாய் 25 லட்சம்.
* மேலும் சிறுநீர் கழிப்பிடம் கட்டுவதற்கு 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெரிய கடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் ரோடு இந்த இடங்களில் போக்குவரத்திற்கான பிரதான சாலை அமைப்பதற்கு 7.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரிக்கு ஒரு கோடி ரூபாய், நீர்நிலை காணொளி திட்டத்திற்கு 3 கோடி ரூபாய் என செலவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. இத்திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த பொறியியல் துறையில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மண்டல பிரிவுக்கு உதவி நிர்வாக பொறியாளர் புவனேஸ்வரி, தெற்கு மண்டல பகுதிகளுக்கு கருப்புசாமி ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக கோவை மாநகராட்சி ஆணையரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.